கம்பளை, டோலுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளதுடன், மற்றொரு பெண் காயமடைந்துள்ளார்.
சாலையைக் கடக்க முயன்ற நான்கு பெண்கள் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவர்கள் அப்பகுதியில் உள்ள ஒரு விகாரையில் ஒரு மத நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தபோது இந்த விபத்தில் சிக்கியதாகக் கூறப்படுகிறது.
விபத்தில் மூன்று பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், மற்ற பெண் சிகிச்சைக்காக கம்பளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.