யாழில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்

tamilni 81

யாழில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்

யாழ்ப்பாணத்தில் மாபெரும் போராட்டத்தில் குதிக்கவுள்ளதாக முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் அறிவித்துள்ளது.

நாளை மறுதினம் (11.0.2023) யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக யாழ். மாவட்ட முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

நாளை மறுதினம் புதன்கிழமை காலை பண்ணையில் அமைந்துள்ள தூர இடங்களுக்கான பேருந்து நிலையத்திலிருந்து ஆரம்பமாகும் பேரணி, யாழ் நகரில் உள்ள வீதி வழியாக வருகை தந்து இறுதியில் கடற்தொழில் அமைச்சரிடம் மகஜர் ஒன்றினையும் கையளிக்கவுள்ளதாக முச்சக்கர வண்டி சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக அண்மைய நாட்களில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் புதிய செயலி மூலம் முச்சக்கர வண்டி சேவையினை மக்கள் பயன்படுத்தி வருவதன் காரணமாக நீண்ட காலமாக முச்சக்கர வண்டியினை தமது வாழ்வாதாரமாக கொண்டு செயல்படுபவர்பவர்கள் பெரும் பாதிப்பினை எதிர்கொண்டுள்ள நிலையில் குறித்த போராட்டமானது முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் முன்னெடுக்கப்படவுள்ளது.

Exit mobile version