முச்சக்கர வண்டிகளுக்கான கட்டணங்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது.
அதன்படி, முதலாவது ஒரு கிலோ மீற்றருக்கு 20 ரூபாவால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
முச்சக்ககர வண்டிகளுக்கு வழங்கப்பட்ட எரிபொருளின் அளவானது இரண்டு மடங்காக அதிகரிப்பட்ட காரணத்தாலேயே முச்சக்கர வண்டி கட்டணங்களைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையானது முதல் கட்டமாக மேல்மாகாணத்தில் எதிர்வரும் 6 ஆம் திகதி முதல் நடைமுறைப் படுத்தப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
#Srilankanews