ஒரே நாளில் மூன்று துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள்! – இருவர் பலி

Gun Shot

இலங்கையில் நேற்று மாத்திரம் மூன்று துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

கம்பஹா , மாக்கவிட்ட, குருச சந்தியில் 34 வயது வியாபாரி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரினால் வர்த்தக நிலையம் ஒன்றுக்கு முன்பாக இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

பாதாள குழுவுடன் தொடர்புடைய கொலையாக இது கருதப்படுகின்றது.

அத்துடன், எல்பிட்டிய, உருகஸ்மன்ஹந்திய பகுதியிலும் 42 வயது நபரொருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்களில் வந்த ஒருவரே துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இக்கொலையும் பாதாள குழுவுடன் தொடர்புபட்டது என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதேவேளை, காலி, அஹுங்கல்ல, கட்டுவில பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் நபரொருவர் காயமடைந்து பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

#SriLankaNews

Exit mobile version