தனமல்வில – உடவலவ வீதியின் மூன்றாம் கட்டைப் பகுதியில் இன்று பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
கப் ஒன்றுடன் ஓட்டோ மோதி விபத்து இடம்பெற்றது எனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ குறிப்பிட்டார்.
விபத்தின்போது தாயும் தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளனர்.
இவர்கள் பதுளையைச் சேர்ந்தவர்கள் எனப் பொலிஸார் கூறினர்.
விபத்துடன் தொடர்புடைய கப் வண்டியின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தனமல்வில பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
#SriLankaNews
Leave a comment