இன்று முற்பகல் ஹட்டன் – வட்டவளை, ரொசல்ல ரயில் நிலையத்துக்கு அருகில் ரயில் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலியாகியுள்ளனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை , மகன் ஆகியோரே இவ்வாறு பலியாகியுள்ளனர் .
இன்று (08) முற்பகல் 11.55 மணியளவில் ரொசெல்ல புகையிரத நிலையத்திற்கு அருகில் பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த உடரட மெனிகே ரயிலுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
ரயில் கடவையை கடக்க முயன்ற போதே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும் இது தற்கொலையா , விபத்தா என்ற சந்தேகத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
#SriLankaNews
.
Leave a comment