வவுனியாவில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் யாழ்.பல்கலைக்கழக மாணவி உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழுப்பு நோக்கி பயணித்த தனியார் சொகுசு பேருந்து பஸ்கள் வவுனியா நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகில் விபத்தில் சிக்கியுள்ளன. இவ்விபத்தில் மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், பலர் படுகாயமடைந்திருந்தனர்.
யாழ்.பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மாணவியான இராமகிருஷ்ணன் அஜாகரி (நாவலப்பிட்டி – வயது 23) , எஸ்.சிவரூபன் (கோவிலடி,
உடுப்பிட்டி – வயது 32), இராமலிங்கம் நிதர்சன் (பருத்தத்துறை – வயது 24) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
மேலும் 16 பேர் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
#Srilankanews