முல்லைத்தீவில் மின்னல் தாக்கி மூவர் காயம்

rtjy 54

முல்லைத்தீவில் மின்னல் தாக்கி மூவர் காயம்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு உடையார் கட்டு குரவில் கிராமத்தில் மின்னல் தாக்கத்தில் வீட்டில் இருந்த ஒரே குடும்பத்தினை சேர்ந்த மூன்று சககோதரர்கள் காயமடைந்துள்ளாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவமானது நேற்று(04.11.2023) பதிவாகியுள்ளது.

வீட்டின் மின்சார இணைப்பு ஊடாக மின்னல் தாக்குதல் இடம்பெற்றுள்ள இதன்போது வீட்டில் பெற்றோர்கள் இல்லாத நிலையில் வீட்டில் இருந்து ஒரு பெண் சகோதரி உள்ளிட்ட இரண்டு ஆண் சகோதரர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வீட்டில் மின்சார இணைப்புக்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளதுடன் இந்த சம்பவத்தில் காயமடைந்த மூவரும் புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளானர்.

Exit mobile version