வவுனியாவில் 8 கிலோ கேரள கஞ்சாவைக் கடத்திச் சென்ற மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று ஓமந்தைப் பொலிஸார் தெரிவித்தனர்.
யாழிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த சொகுசு காரை இன்று காலை வவுனியா ஓமந்தையில் அமைந்துள்ள சோதனை சாவடியில் வழிமறித்த பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் அதில் சோதனைகளை மேற்கொண்டனர்.
இதன்போது குறித்த வாகனத்தில் பொதி செய்து மறைத்து வைக்கப்பட்டிருந்த 8 கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டதுடன் காரும் கைப்பற்றப்பட்டது.
அதேவேளை, காரில் பயணித்த குருநாகல் மற்றும் கண்டி பகுதிகளைச் சேர்ந்த 44 ,41, 39 வயதுகளையுடைய பெண் ஒருவர் உட்பட மூவர் கைதுசெய்யப்பட்டனர்.
மீட்கப்பட்ட கேரள கஞ்சாவின் பெறுமதி சுமார் 12 இலட்சம் ரூபாவாக இருக்கலாம் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர் என்று ஓமந்தைப் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.
#SriLankaNews
Leave a comment