80 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது!

கைது

சுமார் 80 இலட்சம் ரூபா பெறுமதியான, ஒரு கிலோகிராம் அளவிலான ஐஸ் ரக போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை யாழ்., நெடுந்தீவில் வைத்து, கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது, குறித்த போதைப்பொருள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 3 சந்தேகநபர்களையும் கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

அத்துடன், சந்தேகநபர்கள் போதைப்பொருளை கடத்துவதற்குப் பயன்படுத்திய படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது எனவும் கடற்படை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

#SriLankaNews

Exit mobile version