புத்தளம் – கற்பிட்டி பகுதியில் சட்டவிரோதமான முறையில் கடலாமைகளை கடத்த முயன்ற குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசேட புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளுக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய கற்பிட்டி பொலிஸாருடன் இணைந்து நேற்று (06) தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது சட்டவிரோதமான முறையில் கடலாமைகளை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் கற்பிட்டி, கொச்சிக்கடை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரையும் இன்று (07) புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
#SriLankaNews
Leave a comment