அயோமா ராஜபக்சவுக்கு அச்சுறுத்தல்! – சந்தேக நபருக்கு பிணை

law

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் மனைவி அயோமா ராஜபக்சவுக்கு அச்சுறுத்தல் விடுத்து 10 இலட்சம் ரூபாவை பெற்றுக்கொள்ள முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

கொலன்னாவ, சாலமுல்ல, லக்சட செவன பகுதியைச் சேர்ந்த கணேசன் ஜெகன் என்பவரே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபத்த ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டாரவின் முறைப்பாட்டின் பிரகாரம், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக தலைமை பொலிஸ் பரிசோதகர் எஸ். கே. சேனாரத்ன நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

தாம் வேறு ஒருவரிடமிருந்து 4 இலட்சம் ரூபாவை பெற்றதாகவும், அதனை பெற்றுக்கொள்வதற்காக தொலைபேசி இலக்கத்தை ஊகித்து இந்த அழைப்பை மேற்கொண்டதாகவும் சந்தேக நபர் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

வழக்கு விசாரணை அடுத்த மாதம் 06 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Exit mobile version