பதவி ஆசைக்காக ராஜபக்சக்களின் கால்களில் விழுந்தவர்கள்! – முன்னாள் அமைச்சர்களைப் போட்டுத் தாக்கும் ராஜித

rajitha mp

“நாட்டின் நலன் கருதி அனைவரும் அமைச்சுப் பதவிகளைத் துறந்துவிட்டோம் என்று கூறிவரும் முன்னாள் அமைச்சர்கள், ஏன் அரசிலிருந்து வெளியேறாமல் ராஜபக்சக்களுடன் ஒட்டிக்கொண்டு இருக்கின்றார்கள்? ராஜபக்சக்களை இன்னமும் நம்புகின்றீர்களா என்று அவர்களிடம் கேள்வி கேட்க விரும்புகின்றேன்.”

– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

“நாட்டின் இன்றைய நெருக்கடி நிலைமைக்கு ராஜபக்சக்கள் மட்டுமன்றி முன்னாள் அமைச்சர்களும் பொறுப்புக்கூற கூறவேண்டும். ஏனெனில் தீர்மானங்களை எடுக்கும் அமைச்சரவையில் அவர்களும் அங்கம் வகித்தவர்கள். பதவி ஆசைக்காக ராஜபக்சக்களின் கால்களில் அவர்கள் விழுந்தவர்கள். எனவே, கூட்டுப் பொறுப்பை அவர்கள் ஏற்கவேண்டும்” – என்றார்.

#SriLankaNews

Exit mobile version