யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பட்டத் திருவிழா இம்முறை இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் பூரண ஆதரவுடன் “வல்வெட்டித்துறை சர்வதேச பட்டத் திருவிழா 2022” ஆக நடைபெறவுள்ளது.
யாழ். பட்டத் திருவிழா ஏற்பாட்டுக் குழுவினருக்கும் கௌரவ இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (28) கொழும்பில் இடம்பெற்றது.
இதன்போது “வல்வெட்டித்துறை சர்வதேச பட்டத் திருவிழா 2022” இனை கோலாகலமாக நடத்துவதற்கு இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் முழு ஆதரவை வழங்குவதாக கௌரவ அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்கள் குறிப்பிட்டார்.
ஆண்டுதோறும் தைப்பொங்கல் தினத்தில் யாழ். வல்வெட்டித்துறை கடற்கரையில் பட்டத் திருவிழா நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
#SrilankaNews
Leave a comment