sajith
அரசியல்இலங்கைசெய்திகள்

இந்த அரசை வேரோடு பிடுங்கி வீச வேண்டும்! – சஜித் சூளுரை

Share

“ராஜபக்ச அரசு நாட்டுக்கு ஒரு கெடுவினையாகும். காட்டுமிராண்டித்தனமான இந்த அரசை மக்களின் ஆணையுடன் வேரோடு பிடுங்கி வீச வேண்டும்.”

– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

அரசுக்கு எதிராகச் சஜித் பிரேமதாஸ தலைமையில் எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல கட்சிகளைச் சார்ந்த உறுப்பினர்களின் பங்கேற்புடன் கொழும்பு சுதந்திர சதுக்கத்துக்கு அருகில் இன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“மக்களின் எதிர்பார்ப்பை தவிடுபொடியாக்கிய இந்த அரசை ஒருகணமேனும் ஆட்சியில் தக்க வைக்க இந்நாட்டு மக்கள் தயாராக இல்லை.

இந்த அரசு ஜனநாயக ரீதியாக மக்கள் ஆதரவின் பெயரால் தூக்கியெறியப்படும். நாம் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் முகமாக உறுதியாக முன் நிற்கின்றோம்.

இந்த அரசு நாட்டு மக்களை மயானத்தின் பக்கம் தள்ளிக்கொண்டிருக்கின்றது. இந்தக் காட்டுமிராண்டித்தனமான அரசை முற்றிலுமாக வீழ்த்தி தூக்கி எறிய வேண்டும்” – என்றார்.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...