தற்போதைய சீரற்ற காலநிலை காரணமாக, நந்திக்கடலுக்கும், பெருங்கடலுக்கும் இடையில் உள்ள மணல் திடல் இயற்கையாகவே உடைப்பெடுத்து நந்திக்கடல் நீர் பெருங்கடலுடன் சங்கமித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது,.
நந்திக்கடலினை அண்டியிருந்த வயல் நிலங்கள் நீரில் மூழ்கியதுடன், வட்டுவாகல் பாலத்திற்கு மேல் நந்திக்கடலின் நீர்மட்டம் அதிகரித்திருந்தமையால், வட்டுவாகல் பாலப் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
இந்தநிலையில் நேற்று இரவு நந்திக்கடல் இயற்கையாகவே, உடைப்பெடுத்து பெருங்கடலுடன் சங்கமித்துள்ளது.
நந்திக்கடல் நீரை பெருங்கடலுடன் இணைத்து நந்திக்கடலின் நீர்மட்டத்தை குறைக்குமாறு விவசாயிகளும், வட்டுவாகல் பகுதி மக்களும் கோரியிருந்த நிலையில், தற்போது இது இயற்கையாக இடம்பெற்றதாகவே கூறப்படுகிறது.
#SrilankaNews
Leave a comment