” இந்த அரசுக்கு சர்வதேச ஒத்துழைப்பு கிடைக்காது. எனவே, புதிய அரசு அமைந்தால்தான் சர்வதேச சமூகத்தின் ஆதரவை பெறக்கூடியதாக இருக்கும் .” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
” அரசமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்தை கொண்டுவந்தவேளை, அது தவறான நடவடிக்கை என எதிரணியாகிய நாம் சுட்டிக்காட்டினோம். திருத்தங்களை முன்வைத்தோம். ஆனால் எமது கோரிக்கையை அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. இன்றைய அரசியல் நெருக்கடி நிலைக்கு இந்த 20 வும் பிரதான காரணமாகும்.
நாடாளுமன்றம் வசம் இருந்த அதிகாரங்கள் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டன. இவ்வாறு ஜனாதிபதியிடம் அதிகாரங்கள் உள்ள நிலையில், நாடாளுமன்றத்தால் எவ்வாறு தீர்வை தேட முடியும் என்பதை சபாநாயகர் புரிந்துகொள்ள வேண்டும். தற்போது 20 ஐ இல்லாதொழிக்க முற்படுகின்றனர். இது காலம் கடந்த ஞானம். எனவே, புதிய அரசு அமைந்தால்தான் பிரச்சினைக்கு தீர்வை தேட முடியும்.” – என்றும் கிரியல்ல குறிப்பிட்டார்.
#SriLankaNews