9 57
இலங்கைசெய்திகள்

விடுதலைப்புலிகளை ஏற்காதவர்கள் சீமானை ஆதரிப்பது ஏன்..! திருமாவளவன் கேள்வி

Share

விடுதலைப்புலிகளை ஏற்காதவர்கள் வரிந்துகட்டி சீமானை(seeman) ஆதரிப்பது ஏன் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்(thirumavalavan) கேள்வியெழுப்பியுள்ளார்.

சென்னையில்(chennai) இன்று செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன் மேற்கண்டவாறு கேள்வியெழுப்பினார். அங்கு அவர் மேலும் கூறியதாவது,

கோழை தமிழ் தேசியவாதிகள் பெரியாரை கொச்சைப்படுத்தத் துணிந்துள்ளார்கள். பெரியாரைக் கொச்சைப்படுத்திப் பேசுவதை தேர்தல் அரசியல் என கடந்துவிட முடியாது.

பெரியாரைக் கொச்சைப்படுத்தி பேசுவோர் பாஜகவின் கொள்கைப் பரப்பு அணி போல் செயல்படுகிறார்கள். பெரியாரைப் பேசும் ஒவ்வொன்றும் அம்பேத்கர் மார்க்சியத்துக்கு எதிரானது.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை அண்ணாமலை, எச்.ராஜா, குருமூர்த்தி போன்றோர் ஆதரிக்கின்றனர். அண்ணாமலை, எச்.ராஜா, குருமூர்த்தி போன்றோர் என்றாவது விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனை ஆதரித்ததுண்டா?

பா.ஜ.கவின் கொள்கை பரப்பு அணி போல் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செயல்படுகிறார். இது வெறும் திராவிட எதிர்ப்பு அரசியல் அல்ல, நமது கோட்பாட்டுக்கு எதிரான அரசியல் என தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
gold price growth
இலங்கை

இன்றைய நாளில் உயர்வினை பதிவு செய்த தங்கத்தின் விலை.

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம்...

sajith premadasa
இலங்கை

எதிர்க்கட்சித் தலைவர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், இன்று பாராளுமன்றத்தில் வைத்து நம்பிக்கையில்லாத்...

Suresh Salley
இலங்கை

மீண்டும் விசாரணைக்கு வந்த சுரேஷ் சலே வழக்கு.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக , பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது...

body
இலங்கை

இரத்தினபுரியில் மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்!

  இரத்தினபுரி , கொடிகமுவவில் பகுதியில் தனியாக வசித்து வந்த 32 வயதான கமகே நிசான்ச...