IMG 20211213 WA0003 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழில் மூன்றாவது தடவை தடுப்பூசி வழங்கல் ஆரம்பம்!

Share

30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான மூன்றாவது தடவை தடுப்பூசி வழங்கல் யாழ். மாவட்டத்தில் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்தின் சகல சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பிரிவுக்குட்பட்ட மக்களுக்கான தடுப்பூசி வழங்கும் செயற்திட்டம் இன்று காலை முதல் ஆரம்பமாகி இடம்பெறுகிறது.

கொவிட்-19 தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் கீழ் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், 18 வயதிற்கு மேற்பட்ட பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்குவகிக்கும் தொழிலாளர்கள் மற்றும் நோய் பரவும் ஆபத்துள்ள மக்கள் தொகுதியினருக்கும் (தொழிற்சாலைகள் மற்றும் பணியிடங்களில் பணிபுரிவோர்,

சுகாதாரதுறை சாராத முன்னிலை ஊழியர்கள்) மேலதிகமாக மூன்றாவது தடவையாக (கொவிட்-19 தடுப்பூசியானது திங்கட்கிழமை முதல் வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் வழங்கப்படுகிறது.

IMG 20211213 WA0002 1

மேற்குறிப்பிட்டவர்கள் இரண்டாவது தடுப்பூசியைப் பெற்று ஆகக் குறைந்தது மூன்று மாத இடைவெளியின் பின்னர் இத் தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளலாம்.

இரண்டுதடவைகள் கொவிட்-19 தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களில் கொவிட்-19 தொற்றிற்கு உள்ளானவர்கள் அவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்ட நாளிலிருந்து 06 மாதகால இடைவெளியின் பின்னர் இத் தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளலாம்.

IMG 20211213 WA0000 1

எனவே மேற்குறிப்பிட்டவர்களில் சினோபாம் அல்லது ஏதாவது ஒரு கொவிட்-19 தடுப்பூசியை இரண்டு தடவைகள் பெற்றுக்கொண்டவர்கள் மட்டுமே தமது தடுப்பூசி அட்டையினை சமர்ப்பித்து தமக்குரிய மூன்றாவது தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இத் தடுப்பூசிகள் வழங்கப்படும் நிலையங்கள் தொடர்பாக அந்தந்த  பிரதேசங்களிற்குரிய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மூலம் மக்களிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது

அவ்வகையில் மேற்குறிப்பிட்டவர்கள் அந்தந்த பிரதேசங்களிற்குரிய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளில் அல்லது அவர்களால் அறிவிக்கப்படும் நிலையங்களில் இன்றும் மற்றும் தடுப்பூசி அல்லது வேறு மருந்துகளிற்கு ஒவ்வாமை உடையவர்களுக்கு,

மார்கழிமாதம் 18 ஆம் திகதி முதல் பிரதி சனிக்கிழமைகளில் தடுப்பூசி வழங்குவதற்கு யாழ் மாவட்டத்தில் யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் பருத்தித்துறை, ஊர்காவற்துறை, தெல்லிப்பழை, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைகளிலும்,

கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களில் உள்ள மாவட்ட பொது வைத்தியசாலைகளிலும் இத்தடுப்பூசிகள், வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

30 வயதிற்குமேற்பட்டவர்களில் அவ்வாறான நிலைமைகள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு தடுப்பூசி வழங்கப்படாது திருப்பி அனுப்பப்பட்டவர்கள் தடுப்பூசி வழங்கும் நிலையத்தில் உள்ள வைத்திய அதிகாரியின் பரிந்துரைக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டு

மேற்குறிப்பிட்ட வைத்தியசாலைகள் ஏதாவது ஒன்றில் தமக்குரிய மூன்றாவது தடுப்பூசியினை பாதுகாப்பாக பெற்றுக்கொள்ளமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
32 4
இலங்கைசெய்திகள்

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை – சாகர

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர்...

31 4
இலங்கைசெய்திகள்

மிரட்டுகின்றார் அநுர! சுமந்திரன் பகிரங்க குற்றச்சாட்டு

தங்களிடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் உள்ளது என்றும், தன்னிடம் நிறைவேற்று அதிகாரம் உள்ளது என்றும் ஜனாதிபதி...

30 5
இலங்கைசெய்திகள்

நீரில் மூழ்கிய நயினாதீவு படகுப் பாதை

நயினாதீவு – குறிகட்டுவான் இடையே சேவையில் ஈடுபட்ட நிலையில் நீண்ட காலமாக பழுதடைந்து சேவையில் ஈடுபட...

28 7
இலங்கைசெய்திகள்

இலங்கையும் இந்தியாவும் செய்து கொண்ட முக்கிய உடன்படிக்கை

இலங்கையின் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் கீழ், கடன் வரி மற்றும் கொள்வனவாளர் கடன் ஒப்பந்தங்கள்...