” போராட்டங்களின்போது காட்டிக்கொடுப்பவர்களும் இருக்கவே செய்வார்கள். அதற்காக போராட்டத்தை கைவிடமுடியாது. ராஜபக்சக்கள் இல்லாத ஆட்சியை உருவாக்க தொடர்ந்தும் போராடுவோம்.”
இவ்வாறு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,
” நாட்டில் அரசியல் ஸ்தீரத்தன்மையை ஏற்படுத்துவதற்காக ராஜபக்சக்கள் அற்ற ஆட்சியை உருவாக்குமாறு வலியுறுத்தினோம். அதைவிடுத்து விலைபேசும் அரசியல் தற்போது இடம்பெறுகின்றது. இதனை தோற்கடிக்க வேண்டும். போராட்டங்களில் காட்டிக்கொடுக்கும் கறுப்பாடுகள் இருக்கவே செய்யும். அதற்காக போராட்டத்தை கைவிடமுடியாது. தொடர்ந்தும் நாம் போராடுவோம்.” – என்றார் .
#SriLankaNews