இன்றும் சமையல் எரிவாயு விநியோகம் இல்லை!

litrp

நாட்டில் இன்றும் சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெறமாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்காரணமாக விற்பனை நிலையங்களில் எரிவாயுவுக்காகக் காத்திருப்பதைத் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.

இதேவேளை, எரிவாயு விநியோகத்தை நாளை முதல் முன்னெடுக்கக்கூடியதாக இருக்கும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

கடந்த 26ஆம் திகதி இலங்கையை வந்தடையவிருந்த 3 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் எரிவாயு தாங்கிய கப்பல் தாமதமடைந்தது.

இந்தநிலையில் குறித்த எரிவாயு கப்பல் இன்று இலங்கையை வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாளை முதல், எரிவாயு விநியோகத்தை முன்னெடுக்கக்கூடியதாக இருக்கும்.

எனவே, இன்று எரிவாயுவைப் பெற்றுக்கொள்ள வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் பொதுமக்களைக் கோரியுள்ளது.

இதேவேளை, எரிவாயு அடங்கிய இரண்டு கப்பல்கள் எதிர்வரும் முதலாம் மற்றும் 5ஆம் திகதிகளில் நாட்டை வந்தடையும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

#SriLankaNews

 

Exit mobile version