அனைத்து மக்களுக்கும் அபிவிருத்தி – யாழில் நாமல்

namal 678

அனைத்து மக்களுக்கும் அபிவிருத்தி – யாழில் நாமல்

தற்போதைய அரசு வடக்கு கிழக்கு தெற்கு என்று பார்க்காது அனைத்து மக்களுக்கும் அபிவிருத்தி கிடைக்க வேண்டும் என திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

குறிப்பாக வடக்கு கிழக்கிலேயே அதிக அளவிலான திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.

யாழுக்கு இன்று விஜயம் செய்து அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் பார்வையிட்டதன் பின்னர் நடத்திய ஊடக சந்திப்பில் நாமல் ராஜபக்ச இவ்வாறு  தெரிவித்துள்ளார்.

அத்துடன் தெற்கு தெய்வேந்திரமுனையிலிருந்து வடக்கில் பருத்தித்துறைமுனை வரை அரசால் அபிவிருத்தி திட்டங்கள் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன் தற்போதைய அரசு வடக்கு கிழக்கு தெற்கு என்று பார்க்காது அனைத்து மக்களுக்கும் அபிவிருத்தி கிடைக்க வேண்டும் என திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. குறிப்பாக வடக்கு கிழக்கிலேயே அதிக அளவிலான திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் யாழ்.மாநகர சபைக்கு புதிய கட்டடம் அமைக்கப்பட்டு வருகின்றது. அது பல மில்லியன் ரூபா மத்திய அரசின் நிதியில் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் குளங்கள், வீதி அபிவிருத்தி போன்ற பல்வேறு செயற்றிட்டங்களுக்கு வடக்கு கிழக்கில் இடம்பெற்று வருகின்றது.

எனவே தற்போதைய அரசு பிரிவினை பார்க்காது அனைத்து பிரதேசங்களிலும் அபிவிருத்தித் திட்டங்களை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றது.

நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் ஆட்டிப்படைக்கின்றது. எனினும் அந்தத் தடையைத் தாண்டி அதனைக் கட்டுப்படுத்தும் வேலைத்திட்டதோடு அபிவிருத்தியையும் அரசு முன்னெடுக்கின்றது.

அத்துடன் அத்தியாவசிய பொருள்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. அது தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்பட்டு அதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version