இந்துசமய வரலாறுகளை அறிய வழிமுறைகள் இல்லை –

Screenshot 20221020 210351 WhatsApp

தற்போதைய மாணவர்கள் இந்து சமய வரலாறுகளை கற்பதற்குரிய வழி முறைகள் தற்காலத்தில் காணப்படுவது இல்லை என யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சி.சிறீசற்குணராஜா தெரிவித்தார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வேந்தரும் தகைசார் பேராசிரியருமான சி.பத்மநாதனின் திருக்கேதீஸ்வரம், திருக்கோணேஸ்வரம் பற்றிய மூன்று ஆய்வு நூல்களின் வெளியீட்டு விழாவில் தலைமை உரை நிகழ்த்தும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர், மேலும் தெரிவிக்கையில், “குறிப்பாக மகாபாரதம் , இராமாயணத்தை தற்போதுள்ள மாணவர் சமூகமானது சினிமா  மூலம் தொலைக்காட்சி நாடகங்கள் மூலம் மாத்திரமே பார்வையிடக்கூடிய நிலை காணப்படுகின்றது. இதன் காரணமாக நீண்ட கால வரலாற்றை கொண்ட நமது இந்து மதத்தின் வரலாறுகளை தற்போதுள்ள இளைஞர்கள் அறிவதற்கு சந்தர்ப்பங்கள் குறைவாக காணப்படுகிறது

திருகோணஸ்வரம், திருக்கேதீஸ்வரம் போன்ற ஆலயங்களுக்கு நெருக்கடி வரும்போதே அதனுடைய அருமை தெரிகிறது. நெருக்கடிகள் சில காலத்திற்கு ஏற்படும். காலத்திற்கு காலம் போத்துக்கேயர், ஒல்லாந்தர்கள் வந்தார்கள். தற்போதும் திருகோணஸ்வரம், திருக்கேதீஸ்வரம் போன்ற ஆலயங்களுக்கு நெருக்கடி ஏற்படுகின்றது” – என்றார்.

#Srilanka news

Exit mobile version