அநுராதபுரம் சிறைச்சாலையில் சிசிடிவி கமெராக்கள் பொருத்தப்பட்டு இல்லை என்று சிங்கள பத்திரிகை ஒன்றில் தெரிவித்துள்ளது.
லொஹான் ரத்வத்த கடந்த ஞாயிற்றுக்கிழமை அநுராதபுர சிறைச்சாலைக்கு சென்று அங்குள்ள தமிழ் கைதிகளை மிரட்டினார் என தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றுவரும் நிலையில் இந்த செய்தி பத்திரிகையில் வெளியாகியுள்ளது.
குறித்த செய்தியில், அங்குனகொலபெலஸ்ஸ, களுத்துறை மற்றும் பூஸா ஆகிய சிறைச்சாலைகளில் மட்டுமே இந்த சிசிரிவி வசதிகள் காணப்படுகின்றன எனதெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்நிலையில், லொஹான் ரத்வத்தவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைக்கு சிசிடிவி காட்சிகள் எதுவும் கிடைக்காது.
ஆனாலும் சிறைச்சாலை வருபவர்கள் கையொப்பமிடும் பதிவுப் புத்தகத்த்தின் மூலமாக தேவையேற்படின் விசாரணையை மேற்கொள்ள முடியும் என்று சிறைச்சாலை தலைமையகம் கூறியுள்ளது எனவும் குறித்த செய்தி இடம்பெற்றுள்ளது.