அரசாங்கத்துக்குள் திருட்டுத்தனம்! – விமல் வீரவன்ச விளாசல்

vi

இந்த அரசின் அமைச்சரவையில் பொய்யாகவும் திருட்டுத்தனமாகவும் அமைச்சரவை தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. – இவ்வாறு ஆளும் கட்சியின் பங்காளிக் கட்சியான தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இலங்கையின் எரிபொருள் வளத்தை அமெரிக்காவுக்கு தாரை வார்க்க அரசு முயற்சித்துள்ளது.

இதற்கு அரசாங்கத்தில் உள்ள 12 பங்காளிக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து பேரவையின் முதல் கூட்டத்தை நடத்தியிருந்தன.

ஐந்து வருடங்களுக்கு மட்டும் ஆட்சியைக் கைப்பற்றி, நாட்டுக்கு தொடர்ச்சியாக கிடைக்கும் வளங்களை வெளிநாடுகளுக்குப் பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது.

இலங்கையின் எரிவாயுவைப் பெறும் வளத்தை அமெரிக்காவுக்கு நீண்டகாலத்துக்கு வழங்கவதற்கு அமைச்சரவையில் திருட்டுத்தனமாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Exit mobile version