ஜனாதிபதி மாளிகையில் பாரம்பரிய சின்னங்கள் திருட்டு!

SriLanka2

பண்டைய காலத்திலிருந்து இந்நாட்டை ஆண்ட மன்னர்கள், ஜனாதிபதிகள் மற்றும் வெளிநாட்டு தலைவர்களின் அடையாளமாக ஜனாதிபதி மாளிகையில் வைக்கப்பட்டிருந்த சுமார் 40 பாரிய கொடிகள் களவாடப்பட்டுள்ளன என்று தகவல் வெளியாகியுள்ளது.

போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்து பாதுகாக்கப்பட்டுவந்த இந்தக் கொடிகள், தொல்லியல் மிக்கவை என்று சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதன் காரணமாக எதிர்கால சந்ததியினர் இந்த கொடிகளை காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இந்த நாட்டை ஆண்ட ஒவ்வொரு ஜனாதிபதியும் இந்த வரலாற்று பெறுமதி மிக்க கொடிகளையும் அங்கிருந்த தொல்பொருட்களையும் பாதுகாத்து வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டவர்களும் அதனை பார்வையிட வந்தவர்களும் இந்த கொடிகளையும் கலைப்பொருட்களையும் எடுத்துச்சென்றிருக்கலாம்.

காணாமல் போன கொடிகள் மற்றும் தொல்பொருட்களைக் கண்டறிய விரிவான விசாரணகள் இடம்பெறுகின்றன.

இதேவேளை, ஜனாதிபதி மாளிகைக்கு ஏற்பட்ட சேதம் மிகப் பெரியது எனவும், அதற்கான மதிப்பீட்டு அறிக்கைகள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி மாளிகை, அலரிமாளிகை, ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம் போன்றவற்றை சேதப்படுத்தி அந்த இடங்களில் பொருட்களை திருடிய சுமார் 100 பேரை குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் ஏனைய பொலிஸ் குழுக்கள் அடையாளம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களின் தகவல்களை தற்போது புலனாய்வு அதிகாரிகள் மற்றும் புலனாய்வு அதிகாரிகள் சேகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

#SriLankaNews

Exit mobile version