கோயில் நகைகள் திருட்டு! – சந்தேக நபர் கைது

gold

இரத்தினபுரி – மஹவலவத்த சிவன் கோவிலிலுள்ள காளிச் சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

திகன பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 39 வயதுடைய நபரே இச்சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலத்துக்கு அமைவாக குறித்த நகைகள் நகை அடகு பிடிக்கும் நிலையமொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.

கோவிலிலுள்ள காளி சிலையிலிருந்து நகைகள் காணாமல் போயுள்ளதாக இந்த மாதம் 17ஆம் திகதி இரத்தினபுரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததை தொடர்ந்தே இச் சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் தமக்கு தொழில் இழக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் தான் தொடர்ச்சியாக நிவித்திகல பிரதேசத்திலுள்ள 7 கோவில்களிலுள்ள சிலைகளின் தங்க ஆபரணங்களை திருடியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் குறித்த சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், திருடப்பட்ட நகைகளை நீதிமன்றில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

Exit mobile version