மந்திரிமனை ஜன்னல்கள் மற்றும் கம்பிகள் திருட்டு!

வரலாற்று தொன்மை வாய்ந்த யாழ்ப்பாணம் – நல்லூர் – மந்திரி மனை யன்னல் மற்றும் யன்னல் கம்பிகள் ஆகியன களவாடப்பட்டுள்ளன.

மந்திரி மனையின் பின்பக்கமாக காணப்பட்ட யன்னல்களின் கம்பிகள் மற்றும் யன்னல் என்பவை கழற்றி எடுக்கப்பட்டு திருடப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

யாழ்ப்பாண மாவட்டத்தின் தலை நகராக இருந்த நல்லூரில் அரச காலத்தோடு சம்மந்தபடும் ஒரு கட்டிடமே மந்திரிமனையாகும்.

இந்த கட்டிடமானது போர்த்துக்கேயரால் யாழ்பாண அரசு கைப்பற்றப்படுவதற்கு முன்னுள்ள காலப்பகுதி வரை அமைச்சரின் இருப்பிடமாக காணப்பட்டது.

13 நூற்றாண்டுகளுக்கு முற்பட்டஇக் கட்டிடம் செங்கட்டி, சுண்ணாம்பு, சாந்து மரங்கள், ஓடுகள் கொண்டு கட்டப்பட்டுள்ளது.

1 1

#SriLankaNews

Exit mobile version