ஆணைக்கோட்டை மூத்தவிநாயகர் ஆலயத்தில் திருட்டு!

images 1 4

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆணைக்கோட்டை மூத்தவிநாயகர் ஆலயத்தில் இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான பித்தளை விளக்குகள் உட்பட பித்தளை பொருட்கள் திருட்டு போனதாக ஆலயத்தினரால் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இதனடிப்படையில் மானிப்பாய் பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளின் போது ஆலய உதவி பூசகர் ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து விசாணைகளை முன்னெடுத்த நிலையில் அவர் இரும்பு வியாபாரிக்கு குறித்த பொருட்களை விற்பனை செய்திருந்தமை தெரியவந்தது.

இதனையடுத்து யாழ்பாணம் பகுதியினை சேர்ந்த இரும்பு வியாபாரியொருவரை சந்தேகத்தின் அடிப்படையில் மானிப்பாய் பொலிஸார் கைது செய்ததோடு குறித்த திருட்டு பொருட்களையும் கைப்பற்றி சட்டநடவடிக்கைகளுக்கு உட்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

#srilankaNews

Exit mobile version