40 அடி உயரத்தில் 5 நிமிடங்கள் வரை பட்டத்தின் கயிற்றை விடாது தொங்கிக் கொண்டிருந்த இளைஞனின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் பருத்தித்துறை வடமராட்சி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இளைஞர்கள் பலர் பட்டத்தின் கயிற்றை மரத்தில் கட்டிவிட்டு பட்டம் ஏற்றியுள்ளார்கள். பின்னர் பட்டத்தை கட்டுப்படுத்த இயலாமல் போகவே இளைஞர்கள் பட்டத்தை கைவிட்டுள்ளனர்.
ஆனால் இளம் குடும்பஸ்தர் ஒருவர் மாத்திரம் குறித்த கயிற்றில் சுமார் 40 அடி வரை தொங்கிக் கொண்டுள்ளார்.
பின்னர் நிலத்தில் விழுந்த குறித்த இளைஞன் பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதிஷ்டவசமாக எவ்வித ஆபத்துக்களும் ஏற்படவில்லை என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
#SriLankaNews
Leave a comment