கொழும்பு வருகிறது உலகின் மிகப்பெரிய கப்பல்

ever ac

உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பலான ‘எவர் ஏஸ்’ (Ever Ace) எனும் கப்பல் நாளை செவ்வாய்க்கிழமை கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

400 மீற்றர் நீளமும் 62 மீற்றர் அகலமும் கொண்ட இந்தப் பெரிய கொள்கலன் கப்பல் 23 ஆயிரத்து 992 கொள்கலன்களுடன் வந்தடையவுள்ளது.

நெதர்லாந்து ரொட்டர்டாம் துறைமுகத்திலிருந்து சுயஸ் கால்வாய் ஊடாக இந்தக் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உலகிலுள்ள 24 துறைமுகங்களில் மட்டுமே இந்தக் கப்பலை கையாள முடியும் எனவும் தெற்காசியாவில் கொழும்பு துறைமுகத்தில் மட்டுமே இந்தளவு பிரமாண்டமான கப்பல் நங்கூரமிட முயைும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version