தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்க முன்வரும் வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம் என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
20 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி பதவிக்கான வாக்கெடுப்பின்போது யாருக்கு ஆதரவு என வினவியபோதே அவர் இவ்வாறு கூறினார்.
” வாக்கெடுப்பின்போது நடுநிலை வகிக்கும் நிலைப்பாட்டிலே தற்போதுவரை இருக்கின்றோம். எனினும், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்க எவரேனும் முன்வந்தால் அவருக்கு ஆதரவு வழங்குவது குறித்து பரீசிலிக்கலாம்.” – என்றும் விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.
#SriLankaNews