நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ளது.
நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் கடந்த 30ஆம் திகதி இடைக்கால வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, அது தொடர்பிலான விவாதம் 31 ஆம் திகதி முதல் இன்று 3 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.
இரண்டாம் வாசிப்பு மற்றும் குழுநிலையின் பின்னர் மாலை வாக்கெடுப்பு நடத்தப்படும்.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, எதிர்த்து வாக்களிக்கவுள்ளது.
#SriLankaNews

