“சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதற்கு அரசு எடுத்துள்ள தீர்மானத்துக்கு எமது கட்சி வரவேற்கின்றது.”
– இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-
“நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் இருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தை நாடுமாறு, இன்றைக்கு ஒன்றரை வருடங்களுக்கு முன்னரே எமது கட்சி ஆலோசனை வழங்கியது. அதற்கான காரணங்களையும் தெளிவுபடுத்தியது.
எனினும், நெருக்கடி உச்சம் பெற்ற பின்னரே, சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பைப் பெறும் முடிவை அரசு எடுத்துள்ளதும். இது காலம் கடந்த ஞானம். இருந்தாலும் தாமதித்தேனும் சிறந்த முடிவு எடுக்கப்பட்டதை வரவேற்கின்றோம்” – என்றார்.
அதேவேளை, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் அரசின் முடிவை வரவேற்றுள்ளது.
#SriLankaNews
Leave a comment