இலங்கையின் மீது சூரியன் நேரடியாக உச்சம் கொடுக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சூரியனின் தெற்கு நோக்கிய தொடர்புடைய இயக்கத்தின் விளைவாக ஒகஸ்ட் 28 முதல் செப்டெம்பர் 7 வரை இந்த நேரடியாக உச்சம் கொடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று (31) நண்பகல் 12.10 மணியளவில் கப்பச்சி (வவுனியா மாவட்டம்), தம்மன்னேகுளம் (அநுராதபுரம் மாவட்டம்) மற்றும் உப்புவெளி (திருகோணமலை மாவட்டம்) ஆகிய இடங்களில் சூரியன் நேரடியாக உச்சம் கொடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews