ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காலி முகத்திடலில் இரண்டாவது நாளாகவும் தொடர்ச்சியாக போராட்டம் இடம்பெற்று வருகிறது.
நேற்று காலை பல்கலை மாணவர்கள், இளைஞர்கள், யுவதிகள், மதகுருமார்கள் உள்பட பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றுதிரண்டு அரசுக்கெதிரான போராட்டத்தை காலி முகத்திடலில் ஆரம்பித்திருந்தனர்.
கொட்டும் மலைக்கு மத்தியிலும் ஒன்றுதிரண்ட மக்கள் ஜனாதிபதி இல்லத்தையும் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போடட்டும் நிறுத்தப்படாது இரவிரவாக தொடர்ச்சியாக நடைபெற்ற நிலையில், இன்று இரண்டாவது நாளாகவும் இடம்பெற்று வருகிறது.
#SriLankaNews