4ஆவது நாளாகவும் காலி முகத்திடலில் மக்கள் அலை! – தொடர்கின்றது அரசுக்கு எதிரான போராட்டம்

new photo e1649743324960

எந்தவொரு அரசியல் கட்சிகளின் தலையீடின்றி கடந்த 9ஆம் திகதி காலை முதல் கொழும்பு – காலி முகத்திடலில் ஒன்றுகூடிய மக்கள் இன்று நான்காவது நாளாகவும் கோட்டாபய அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இடைக்கிடையே மழை பெய்து வருகின்ற போதிலும் ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், அரசும் பதவி விலக ​வேண்டும் எனக் கோரி மக்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இதனிடையே, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோருக்கு பலர் தாமாக முன்வந்து உணவு, குடிதண்ணீர் மற்றும் மருந்துப் பொருட்கள் போன்றவற்றை வழங்கி வருகின்றனர்.

இதேவேளை, கோட்டாபய அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாட்டின் பல பகுதிகளிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

#SriLankaNews

 

Exit mobile version