தந்தையை ஆயுதத்தால் தாக்கி கொன்ற மகன்!
கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் தகப்பனுக்கும் மகனுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் மகன் கடும் ஆயுதத்தைக் கொண்டு தாக்கியதால் தந்தை உயிரிழந்துள்ளதாக தர்மபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
66 வயதுடைய ராமசாமி என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தொடர்பில் உயிரிழந்தவரின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
#srilankaNews
Leave a comment