தூக்க கலக்கத்தில் புகையிரத நிலையத்தில் இறங்கிய சிப்பாய் காயம்!

2020 02 28

தூக்கத்தினால் இறங்க வேண்டிய புகையிரத நிலையத்தை தவற விட்டமையால் , மற்றைய புகையிரத நிலையத்தில் அவசரமாக இறங்க முற்பட்ட இராணுவ சிப்பாய் காயமடைந்த நிலையில் தெல்லிப்பளை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் கடமையாற்றும் எஸ். விஜயசிங்க (வயது 26) எனும் இராணுவ சிப்பாயே காயமடைந்துள்ளார்.

குறித்த சிப்பாய் தனது ஊரில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு கடமைக்காக கொழும்பு – யாழ்ப்பாணம் கடுகதி புகையிரதத்தில் வந்துள்ளார்.

யாழ்ப்பாண நிலையத்தில் இறங்க வேண்டியவர் , தூக்கத்தினால் அதனை தவற விட்டுள்ளார். திடீரென தூக்கத்தினால் எழுந்தவர் புகையிரதம் சுன்னாகம் புகையிரத நிலையத்தில் தரித்து நிற்பதனை அவதானித்து , தூக்க கலக்கத்துடன் அவசரமாக இறங்க முற்பட்ட நிலையில் புகையிரதத்தில் இருந்து தவறி விழுந்து காயமடைந்துள்ளார்.

அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தெல்லிப்பளை ஆதார வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர்.

#SriLankaNews

Exit mobile version