பொறளை மருதாணை வீதியில் உள்ள நகை விற்பனை நிலையம் ஒன்றில் இன்று பிற்பகல் கொள்ளை சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
பொறளை முச்சந்தியில் அமைந்துள்ள நகை விற்பனை நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்த ஆயுதம் தாங்கிய இருவரே கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள் இன்று பிற்பகல் 2.50ற்கு விற்பனை நிலையத்திற்குள் நுழைந்து உள்ளனர். சந்தேகநபர்கள் இருவரும் மேல் நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு நகைக்கடையில் இருந்த தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டனர்.
மிகவும் குறைந்த அளவு நேரத்தில் சந்தேகநபர்கள் திருட்டில் ஈடுபட்டு தப்பிச் சென்றுள்ளனர் .இது தொடர்பில் கடையில் பணிபுரியும் ஒருவர் கருத்து வெளியிடுகையில்,
தாங்கள் மூன்று பேர் கடையில் பணிபுரிந்து கொண்டிருந்ததாகவும் நான்கு வாடிக்கையாளர்கள் இருந்ததாகவும் வந்த இருவரும் மேல் வெடி வைத்து அசைய வேண்டாம் என்று கூறினார்கள். அங்கிருந்த நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர் என்றார்.
கொள்ளையிடப்பட்ட தங்க ஆபரணங்களின் பெறுமதி இன்னும் மதிப்பிடவில்லை. சந்தேகநபர்களை கைதுசெய்வதற்கான விசாரணைகளை பொரளை பொலிஸ் நிலையம், கொழும்பு தெற்கு குற்றத்தடுப்பு பிரிவு, கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு என்பன இணைந்து ஆரம்பித்துள்ளன.
#SrilankaNews
Leave a comment