ஐக்கிய மக்கள் சக்தி, கண்டியிலிருந்து கொழும்புக்கு ஆரம்பித்துள்ள பேரணியின் 2ஆவது நாள் இன்றாகும்.
நேற்று கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் இந்தப் பேரணியில் பங்கேற்றனர்.
இந்தநிலையில், கடுகண்ணாவை நகருடன் நேற்று பேரணி நிறைவடைந்த நிலையில், இன்று அங்கிருந்து ஆரம்பமாகின்றது.
நாட்டின் தற்போதைய நெருக்கடிக்குத் தீர்வு வழங்கும் விதமாக, ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவி விலக வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து, இந்தப் பேரணி முன்னெடுக்கப்படுகின்றது.
இந்தப் பேரணி, மே தினத்தன்று, கொழும்பை வந்தடையவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
#SriLankaNews
Leave a comment