முதலில் இனப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்!! – ஜனாதிபதி

image 9b180c9d78

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவான கடன் வசதியுடன் தொடர்புடைய பொருளாதார மற்றும் கட்டமைப்பு சீர்திருத்தங்கள் உரிய முறையில் முன்னெடுக்கப்பட்டால், இலங்கையின் பொருளாதாரம் சரியான பாதையில் பிரவேசிக்கும் என எதிர்ப்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நேர்மறையான வரி சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தி வறிய மக்கள் மீதான VAT போன்ற வரிச் சுமையை குறைப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரத்தை 2019-ல் இருந்த நிலைக்கு 2026-ம் ஆண்டுக்குள் கொண்டு வர முடிந்தால் அது வெற்றியாகும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

பிரதான பொருளாதாரப் பிரச்சினையிலிருந்து இனப்பிரச்சினையை நீக்க முடியாது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நாடு முன்னேற வேண்டுமானால் இனப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Exit mobile version