நெருக்கடிக்குத் தீர்வுகாண கால அவகாசம் வேண்டும்! – கெஞ்சுகின்றது அரசு

எஸ்.எம். சந்திரசேன

“நாட்டின் தற்போதைய நிலை குறித்து ஜனாதிபதி தெளிவுபடுத்தியுள்ளார். இதனை உணர்ந்து, பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மக்கள் எமக்கு சிறிது காலம் அவகாசம் வழங்க வேண்டும்.”

– இவ்வாறு அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-

“நாட்டில் தற்போது நிலவும் பிரச்சினைகளுக்கு எந்தத் தரப்பு காரணம் என்பதை ஜனாதிபதி தெளிவுபடுத்தியுள்ளார். இது நெருக்கடியான காலம். இதில் இருந்து மீள்வதற்கு எமக்கு காலம் அவசியம். அந்த வாய்ப்பை மக்கள் வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கினால் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணமுடியும்.

நெருக்கடியான சூழ்நிலையிலும் எதிரணியினர் அரசியல் இலாபம் தேட முற்படுகின்றனர்” – என்றார்.

#SriLankaNews

Exit mobile version