” சர்வகட்சி அரசமைப்பதற்கு வழிவிட்டு, பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவி விலக வேண்டும்.”
இவ்வாறு சர்வ மதத் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே பௌத்த, இந்து, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மதங்களைச் சேர்ந்த ஆன்மீகத் தலைவர்கள் கூட்டாக இந்த கோரிக்கையை விடுத்தனர்.
நாடு மற்றும் மக்களின் நலன்கருதி பிரதமர் இந்த தியாகத்தை செய்ய வேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
#SriLankaNews