பேருந்து நிலையத்தில் கைகலப்பில் ஈடுபட்ட விலைமாதுக்கள்!

UWBHJjK4lLRgcrlcH5sR

பேருந்து நிலையத்தில் கைகலப்பில் ஈடுபட்ட விலைமாதுக்கள்!

வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் விலைமாதுக்கள் இருவர் கைகலப்பில் ஈடுபட்டமை தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் நடமாடித் திரிகின்ற இரண்டு விலைமாதுக்கள் விடுமுறையில் செல்லும் இராணுவத்தினரை யார் அழைப்பது என தமக்கு முரணப்பட்டு கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த கைகலப்பில் விலைமாது ஒருவர் காயமடைந்த நிலையில், வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாடு தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மேலும், குறித்த பகுதியில் விபச்சாரத் தொழில் ஈடுபடுவர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தி அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வர்த்தகர்களும், சமூக அமைப்புக்களும் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SrilankaNews

Exit mobile version