கோதுமை மா விலையும் குறைந்தது

White flour

நாட்டின் பிரதான கோதுமை மா நிறுவனமான ப்ரிமா நிறுவனம், ஒரு கிலோகிராம் கோதுமைமாவின் விலையை 15 ரூபாவால் குறைத்துள்ளது.

ஐக்கிய அமெரிக்க டொலரின் விலை குறைந்துள்ளதை அடுத்தே, அந்த நிறுவனத்தால் விற்பனைச் செய்யப்படும் சகல வகையான கோதுமை மாவின் விலைகளையும் கிலோகிராம் ஒன்றுக்கு 15 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் அந் நிறுவனம் அறிவித்துள்ளது.

கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்ட​தை அடுது்து, கோதுமை மாவை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அத்துடன் மலையக மக்களும் கோதுமை மாவினால் தயாரிக்கப்படும் உணவு ​பொருட்களில் இருந்து விலகிச் சென்றுள்ளனர் என்றும் விற்பனை முகவர்கள் தெரிவிக்கின்றனர்.

#SriLankaNews

Exit mobile version