ஏலக்காயின் விலை 14,000 ரூபா!!

image cac3b316ba

தற்போது சந்தையில் ஒரு கிலோ கிராம் ஏலக்காயின் விலை 12,000 முதல் 14,000 ரூபா வரை அதிகரித்துள்ளது.

நாட்டில் பயிரிடப்படும் ஏலக்காயின் அளவு குறைந்துள்ளமையே இந்த விலை அதிகரிப்புக்கு காரணம் என்று தேசிய மசாலாப் பொருட்கள் விற்பனை சபை தெரிவித்துள்ளது.

பதப்படுத்தப்பட்ட ஒரு கிலோ கிராம் ஏலக்காய்க்கு சுமார் ஆறு கிலோ கிராம் பச்சை ஏலக்காய் தேவைப்படுவதுடன், சந்தையில் ஒரு கிலோ கிராம் பச்சை ஏலக்காயின் விலை தற்போது 7,000 – 8,000 ரூபா வரை உள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Exit mobile version