நாட்டில் எரிபொருள் வரிசை நாளுக்கு நாள் நீள்கிறது. மறுபுறத்தில் வரிசைகளில் காத்திருப்பவர்கள் உயிரிழக்கும் சம்பவங்களும் பதிவாகிவரும் நிலையில், மேலும் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.
பயாகல பகுதியில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் காத்திருந்த 60 வயதுடைய நபரொருவரே திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னரே இவர் உயிரிழந்துள்ளார்.
வரிசைகளில் காத்திருந்த உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஐ தாண்டியுள்ளது.
#SriLankaNews