நாட்டு மக்கள் சிறந்த இலக்குகளுடன் மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை பிரதம சங்கநாயக வண. கலாநிதி ஓமல்பே சோபித தேரர் உள்ளிட்ட மக்கள் பேரவையுடன் நேற்று முன்தினம் சர்வகட்சி அரசு தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி மேற்படி தெரிவித்துள்ளார்.
மேலும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களின் உண்மையான அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கு, மோசமான பக்கங்களைக் களைந்து, நல்ல இலக்குகளுடன் அனைவரும் மீண்டும் ஒன்றிணைய வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
#SriLankaNews