பாணின் விலை மாத்திரம் அதிகரிப்பு!

New legume flour improves blood glucose response to white bread wrbm large

Sliced bread.

யாழ். மாவட்டத்தில் பாணின் விலை மட்டுமே 10 ரூபாவால் அதிகரிக்கப்படுகின்றது. ஏனைய வெதுப்பகப் பொருட்களின் விலைகளில் மாற்றம் ஏற்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று யாழில் பாண் உற்பத்தி மற்றும் விலை தொடர்பான கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

இதில் யாழ். மாவட்ட வெதுப்பக உற்பத்தியாளர் சங்கம் மற்றும் யாழ். மாவட்ட வெதுப்பக உரிமையாளர் சங்கங்களுடன் மாவட்ட அரசாங்க அதிபரின் தலைமையில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) மற்றும் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை உத்தியோகத்தர் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.

கோதுமை மாவின் விலை அதிகரித்தமையால் ஒரு இறாத்தல் பாணின் விலையை 85 ரூபாவாக அதிகரிக்க முடிவு எட்டப்பட்டது.

இதனால், 450 கிராம் எடை கொண்ட ஒரு இறாத்தால் பாணின் விலை 85 ரூபாவாக இருக்கும்.

ஏனைய வெதுப்பக உற்பத்திப் பொருட் களின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Exit mobile version